பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகப் பணிப்பாளர் பதவிக்கு மும்முனைப் போட்டி
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகப் பணிப்பாளர் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் திணைக்களத்தில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி, பொலிஸ் நிர்வாகப் பணிப்பாளர் பதவியாகும்.
பதவியை இலக்கு வைத்து போட்டி
தற்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மூவர் குறித்த பதவியை இலக்கு வைத்து போட்டியில் குதித்துள்ளனர்.
அவர்களில் இருவர் தற்போதைய பொலிஸ் மா அதிபரின் சமகால அதிகாரிகளாகும். சஞ்சீவ தர்மரத்ன மற்றும் சஜீவ மெதவத்த ஆகியோரே தற்போதைய பொலிஸ் மா அதிபரின் சமகாலத்தவர்களாகும்.
ஆயினும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மேற்குறித்த இருவரையும் விட சேவை மூப்புக் கொண்டவராகும். அவரே தற்போதைக்கு பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பதில் பணிப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் குறித்த பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பதவிக்கு யார் நியமிக்கப்படப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு தற்போதைக்கு சூடுபிடித்துள்ளது.





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
