அரசியல் தலையீடற்ற அதிரடி திட்டம்.. பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்
பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பை விட சிறந்த திட்டம் ஒன்று, அரசியல் செல்வாக்கின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (17) கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முப்படைகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் இந்தக் குற்றங்களை அடக்குவதற்கு தாம் பணியாற்றி வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அரசியல் வட்டாரங்களின் ஆதரவு..
மேலும், சில பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள், சில அரசியல் வட்டாரங்களினதும் சில பொலிஸ் அதிகாரிகளினதும் ஆதரவை பெற்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த புதிய திட்டத்தை நிறுவுவதில் எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எந்தவொரு குற்றத்தையும் மறைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ ஒருபோதும் எந்த உத்தரவுகளைப் நான் ஏற்க மாட்டேன் என்று பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
"துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைப் பொறுத்தவரை, நாங்கள் அவற்றை விசாரித்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளோம். நாங்கள் மிகவும் நுட்பமான திட்டத்துடன் முன்னேறி வருகிறோம்.
பல குற்றச் செயல்கள், வெளிநாடுகளுக்குச் சென்ற நபர்களின் குழுவால் மேற்கொள்ளப்படுகின்றன. இவை குறித்து சர்வதேச சமூகத்துடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



