பொலிஸாரின் கொடூர செயல் அம்பலம்
குருணாகலில் பொலிஸாரின் கொடூர செயற்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் பிடிபட்ட சந்தேக நபரை கொடூரமாக முறையில் பொலிஸார் தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சந்தேகநபர் செயற்பட்ட போதும், அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நபரை தாக்கும் பொலிஸார்
குறித்த சந்தேக நபரை நிலத்தில் தள்ளி விழுத்தி இரண்டு பொலிஸாரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.
சந்தேகநபரின் காலை கட்டும் பொலிஸ்உத்தியோகத்தர் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தரிடம் சந்தேகநபர் தப்பமுடியாது என தெரிவிக்கின்றார்.
மக்கள் குற்றச்சாட்டு
எனினும் சந்தேகநபர் மீது அமர்ந்திருக்கும் பொலிஸ்உத்தியோகத்தர் சந்தேகநபரை விட மறுப்பதுடன் அவரின் கைகளையும் கட்டுமாறு கேட்கின்றார்.
பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகநபரை பிடித்து வைத்து தாக்கும் வேளையில் சந்தேகநபர் தான் தப்பியோடமாட்டேன் என அலறுவதையும் கண்டுகொள்ளால் பொலிஸார் மிலேச்சத்தனமாக செயற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
போதைப்பொருள் பாவனைக்காகவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகின்றன.