கொழும்பில் விசேட சுற்றிவளைப்பு: 17 பேர் கைது( Video)
கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சுற்றிவளைப்பானது, நேற்று (27.12.2023) அன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாளிகாவத்தை கெத்தாராம மற்றும் அதன் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகாமையில் இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து "யுக்திய" விசேட தடுப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, போதைப்பொருள் மற்றும் ஊழலுக்கு எதிரான குற்றங்களுக்காக 14 சந்தேக நபர்களும், 03 சந்தேக நபர்களும், இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் சுற்றிவளைப்பு
மேலும், இந்த நடவடிக்கையின் போது, 3,360 மில்லிகிராம் ஹெரோயின், 8,640 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,300 மில்லிகிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையானது, கொழும்பு மத்தியமாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் உதவி அத்தியட்சகர் மினுர செனரத் அவர்களின் மேற்பார்வையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதியா ஜயசிங்க தலைமையில் இந்த மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நாடளாவிய ரீதியில் நேற்று (27) முதல் இன்று (28) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,422 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர் விசாரணை
அத்துடன், 3 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 37 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 73 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹெரோயின் 347 கிராம்
ஐஷ் 827 கிராம்
கஞ்சா 5 கிலோ 475 கிராம்
கஞ்சா செடிகள் 6,691
மாவா 208 கிராம்
போதை மாத்திரைகள் 3,574
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
