சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் - மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சர்ச்சை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் முரண்பாடான கருத்துக்கள் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விடயம் தொடர்பில் ஆராய பொதுஜன பெரமுனவின் கட்சி தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தலைமையில் கூட்டம் இடம்பெறுகின்றது.
இக் கூட்டமானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி குழுக் கூட்டம் இன்று (20.3.2024) காலை 10.00 மணிக்கு பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே வேட்பாளராக முன்மொழிய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலரும் கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்புமனுவை வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும் என அக்கட்சியின் மற்றொரு குழு கூறுகின்றது.
இவ்வாறான ஒரு நிலையிலே பசில் ராஜபக்ச தலைமையில் முக்கிய மூன்று கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல் சந்திப்பும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் இரண்டாவது சந்திப்பும், தொழிற்சங்க பிரமுகர்களுடன் மூன்றாவது சந்திப்பும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேச்சுவார்த்தை
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதியினால் பசில் ராஜபக்சவிற்கு இந்த சந்திப்பிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ன்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |