13 தொடர்பில் வலுக்கும் புதிய சர்ச்சை: ரணிலுடன் மோத தயாராகும் மொட்டு
13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளார்
இந்த விடயம் தொடர்பில் பொதுஜன பெரமுன அதிருப்தியில் இருப்பதாகவும், ஜனாதிபதியின் உரையின் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகின்றது.
சர்வகட்சி கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இந்திய விஜயத்திற்கு முன்னர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துள்ளார்.
இதன்போது 13ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரம் இன்றி ஏனைய அதிகாரத்துடன் முழுமையாகச் செயற்படுத்துவது தொடர்பில் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய விஜயத்தின் பின்னர் கடந்த வாரம் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்திலும் இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இவ்வாறான நடவடிக்கைகளுக்குப் பொதுஜன பொமுனவுக்குள் சில தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே அடுத்த வாரம் ஜனாதிபதியின் விசேட உரையின் பின்னர் அவர்கள் தமது எதிர்ப்பை முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
