13 தொடர்பில் அடுத்தகட்ட நகர்வு என்ன..! நாடாளுமன்றில் ரணில் விசேட அறிவிப்பு
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவும் இதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து வருகின்றது.
தேவையான சட்டத் திருத்தங்கள்
இந்நிலையில் பொலிஸ் அதிகாரம் தவிர 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களைப் பகிர்வது சம்பந்தமாகவும், அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் பற்றியும் அரசு அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் கட்சிகளிடமும் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 13ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமான அரசின் நிலைப்பாட்டை அடுத்த வாரம் நாடாளுமன்றில் ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
