13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறையாகுமா..! இரண்டு வார கால அவகாசம்
இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை வழங்கியுள்ளார்.
அதற்கேற்ப கட்சித் தலைவர்கள் அவர்களது யோசனையைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
"13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பது ஜனாதிபதியாகிய என்னிடமல்ல, நாடாளுமன்றத்திடம்" என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சிக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
அமைச்சரவை உப குழு யோசனை
அதன்படி, 13 ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பான பொறுப்பு எம்.பிக்களின் கைகளுக்கு வந்துள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனையை முன்வைப்பதற்குக் கட்சித் தலைவர்களுக்கு இரண்டு வார கால அவகாசத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான அமைச்சரவை உப குழு அந்த யோசனையை ஆராய்ந்து பார்த்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
