கடன் நெருக்கடியால் திணறும் மக்கள் - புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மத்திய வங்கி
இணையம் மூலம் உடனடி கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறான நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகார சபையொன்றை நிறுவவும் மத்திய வங்கி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
அதற்கான சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் நிதி தொடர்பான நிறுவன மேற்பார்வை திணைக்களம் கூறுகிறது.
மத்திய வங்கி
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக, பெருமளவிலான மக்கள் கடன்களை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வத்தை செலுத்தியுள்ளனர்.
அதற்கமைய, இணையத்தின் ஊடாக கடன் வழங்கும் பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |