ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெருமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது (Photos)
கற்பிட்டி பகுதியில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெருமதியுடைய ஐஸ் போதைப்பொருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் இருவரும் நேற்று(20) கற்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கை
மேலும் கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய ஐஸ் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருக்கும் வேளையில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 800 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக கற்பிட்டிக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
மேலும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெருமதியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாளைய தினம் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





