ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கையில் 7 லட்சத்துக்கும் அதிகமான இலங்கை ஓய்வூதியர்களுக்கு வருமான வரி அல்லது கொடுப்பனவு வரி அறவிடப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஏறக்குறைய 7,05,000 ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் வருமான வரி மற்றும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நாட்டில் ஏறக்குறைய 70,5000 ஓய்வூதியர்கள் இருப்பதாகவும், அவர்களில் 55 -60 சதவீதம் பேர் ஆண்கள் எனவும் மற்ற 40 -45 சதவீதம் பேர் பெண்கள் எனவும் ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதியப் பணிப்பாளர் கே. ஜி. ஆர். ஜயநாத்கென் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வருமான வரி
இருப்பினும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களையும் வருமான வரிக்கு பதிவு செய்யும் அரசின் கொள்கைக்கமைய, ஓய்வூதியம் பெறுவோர் மற்ற பரிவர்த்தனைகளுக்கும் வரி அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொதுச் செலவினங்களை பொறுத்தவரை, அரசாங்கத்தின் மொத்த வரி வருவாயில் 72 சதவீதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக ஒதுக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 1,751 பில்லியன் ரூபாவாகும். இதில் 1,265 பில்லியன் ரூபா அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி மானியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 506 பில்லியன் ரூபாயாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan