இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி
இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் நேற்று(05.01.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயலாளர் என தெரிவித்து குறித்த நபர் பண மோசடியில் ஈடுபட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
3 இலட்சம் ரூபாய் வரை மோசடி
இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து, காலி மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் உள்ள இருவரிடம் தலா 3 இலட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டதாக தெரிவித்து, அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைதானவர் நாளைய தினம்(07) மாத்தறை நீதவானிடத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சந்தேகநபரிடம் இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக எவரேனும் பணம் வழங்கி இருந்தால், 011 286 42 41 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |