இந்தியாவுக்கும் ஆசிய அமைப்புக்கும் டொலர்களை திருப்பிச் செலுத்திய இலங்கை
இலங்கை அண்மையில், 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவுக்கு திருப்பிச் செலுத்தியதுடன், ஆசிய கிளியரிங் யூனியனுக்கு செலுத்த வேண்டிய 2.2 பில்லியன் டொலர் கடனுடன் கூடுதலாக 200 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியதாக நிதி அமைச்சக தரப்புகள் தெரிவித்துள்ளன.
இலங்கை மத்திய வங்கி, ஆசிய கிளியரிங் யூனியனின் கடன் மற்றும் இந்தியாவின் 400 மில்லியன் டொலர் பரிமாற்றத்தை தவணைகளில் திருப்பிச் செலுத்தி வருகிறது.
இலங்கை மத்திய வங்கி
இதன்படி 2 பில்லியன் டொலர்களை ஏசியூவுக்கும், 400 மில்லியன் டொலர்கள் இந்திய ரிசர்வ் வங்கிக்கும், இலங்கை மத்திய வங்கி செலுத்த வேண்டியுள்ளது.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை ஏற்கனவே 225 மில்லியன் டொலர்களை இந்திய ரிசர்வ் வங்கிக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |