உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார் அநுர

Anura Kumara Dissanayaka Sajith Premadasa sl presidential election
By Benat Sep 22, 2024 01:58 PM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான சதவீதம் கிடைக்கப்பெறவில்லை.

எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன.

இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட வாக்குகள் அதிகமாக பெற்று அநுர குமார திஸாநாயக வெற்றிபெற்றுள்ளார்.

அவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை  5,634,915 ஆகும்.  42.31 சதவீதமாக அவரது வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  32.76 சதவீதமாக அவரது வாக்குகள் பதிவாகியுள்ளன.

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத் தேவையான 50 வீதத்தை தாண்டியிருக்கவில்லை.

எனினும் இரண்டாவது, மூன்றாவது வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்ற வகையில் அனுரகுமார வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை அவரது பதவியேற்பு வைபவம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

 முதலாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், முதல் சுற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார். 

இதுவரையில் மொத்தம் 5,634,915 (ஐம்பத்து ஆறு இலட்சத்து முப்பத்து  நான்காயிரத்து தொள்ளாயிரத்து பதினைந்து) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.   42.31 சதவீத வாக்குகளை இவர் பெற்றுக் கொண்டுள்ளார். 

முதல் சுற்று முடிவுகள் 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஜித ்பிரேமதாச 4,363,035(நாற்பத்து மூன்று இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து முப்பத்தைந்து) வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.  32.76 சதவீத வாக்குகளை சஜித் பிரேமதாச பெற்றுக் கொண்டுள்ளார். 

உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார் அநுர | Sri Lanka S New President

மூன்றாவது  இடத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளதுடன் இதுவரையில் அவர் பெற்றுக் கொண்ட  மொத்த வாக்குகள் 2,299,767 ஆகும்.  17.27 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

எனினும், 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத்தேவையான ஐம்பது வீத வாக்குகளைப் பெறமுடியாதுள்ளது.

எனவே இரண்டாம் விருப்பத் தேர்வு வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மிருசுவில், Southend-on-Sea, United Kingdom

07 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
மரண அறிவித்தல்
அகாலமரணம்

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், மீசாலை சாவகச்சேரி, Kuala Lumpur, Malaysia

07 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

09 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வெள்ளவத்தை, சுழிபுரம், Versailles, France

10 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

09 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, London, United Kingdom, Winnipeg, Canada

08 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Viry-Châtillon, France

31 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, உரும்பிராய், Ajax, Canada

13 Nov, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொழும்பு

10 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொழும்பு, சிங்கப்பூர், Singapore

23 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நெடுங்கேணி, வவுனியா

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US