பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானத்தை வெளியிட்ட அமைச்சர்

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Sajith Premadasa Harini Amarasuriya Nalinda Jayatissa
By Rakesh Aug 13, 2025 06:20 AM GMT
Report

எந்த காரணத்திற்காகவும் பிரதமர் பதவியில் மாற்றத்தை மேற்கொள்ள நாம் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்துச் செயற்பட்டு வருகின்றது.

எனவே, சஜித் பிரேமதாஸவும் நாமல் ராஜபக்சவும் பகல் கனவு காணாது அவர்களது கட்சிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானம் செலுத்துவதே பொறுத்தமானது  என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித் பாணியில் அடிமைத்தன அரசியல் செயற்பாட்டில் நாமல்: அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

சஜித் பாணியில் அடிமைத்தன அரசியல் செயற்பாட்டில் நாமல்: அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

சஜித் மற்றும் நாமலின் பகல் கனவு

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானத்தை வெளியிட்ட அமைச்சர் | Sri Lanka Npp Government Internal Issue

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. அது எதிர்க்கட்சிகளின் பகல் கனவாகும். அரசில் முற்போக்கானவர்களை இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்கத் சஜித் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இவை சில ஊடகங்களால் உருவாக்கப்படும் செய்திகளாகும்.

ஆனால், அவ்வாறு எந்தச் சூழலும் அரசில் இல்லை. எந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டும் பிரதமரைப் பதவி நீக்க நாம் எதிர்பார்க்கவில்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்துச் செயற்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு அமைச்சுக்கள் தொடர்பிலும் புரிதலுடன் செயற்பட்டு வருகின்றோம். "நீங்கள் உங்கள் கட்சிகளைப் பார்த்துக் கொள்ளுங்கள், நாம் பிளவுபடுவோம் எனப் பார்த்துக் கொண்டிருப்பதால் பிரயோசனம் இல்லை" என்று சஜித்திடமும், நாமலிடமும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானத்தை வெளியிட்ட அமைச்சர் | Sri Lanka Npp Government Internal Issue

இதற்கு முன்னரும் ஜே.வி.பி., என்.பி.பிக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. லால்காந்த அரசிலிருந்து விலகுவார் எனக் கூறினர். இவ்வாறான வதந்திகள் இரு நாட்கள் மாத்திரமே பெரிதாகப் பேசப்படும். ஆனால், அவற்றால் எவ்வித பிரயோசனமும் இல்லை.

நாம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதோடு, அரசியல் கலாசாரத்தையும் மாற்றுவோம். அவற்றைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம். அவர்களது பொய்களுக்குப் பதிலளிப்பது பிரயோசனமற்றது. ஆளுந்தரப்பிலுள்ள 159 உறுப்பினர்களும் முற்போக்கானவர்களே என குறிப்பிட்டுள்ளார். 

ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு பெரும்புள்ளிக்கு குறி - அநுர அரசின் அதிரடி

ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு பெரும்புள்ளிக்கு குறி - அநுர அரசின் அதிரடி

நாட்டை உலுக்கிய உலங்குவானூர்தி விபத்து.. விமானி வழங்கிய வாக்குமூலம்

நாட்டை உலுக்கிய உலங்குவானூர்தி விபத்து.. விமானி வழங்கிய வாக்குமூலம்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US