39 இலட்சம் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் 39 இலட்சம் பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் அவதிப்படுவதாகவும் 10 ஆயிரம் குடும்பங்கள் கடும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியம் (யுனிசெவ்) தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டில் 29 இலட்சம் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, குடிநீர், சமூகப் பாதுகாப்புக்குரிய உதவி தேவைப்படுவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான முதலாம் கள அறிக்கையை வெளியிட்டுள்ள யுனிசெவ், இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
பெருந்தோட்டத்துறை சமுதாயம் உணவுப் பாதுகாப்பின்மையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,