அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இன்றைய(25) தினத்திற்குள் மீளப் பெறப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
குறித்த சுற்றறிக்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்தி நேற்று(24) மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சின் செயலாளரால் அனைத்து அரச சுகாதார அதிகாரிகளுக்கும் கடந்த சனிக்கிழமை குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
திணைக்களத்தின் பிரதானிகளின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடவோ அல்லது வழங்கவோ முடியாது என சுகாதார சேவையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்ட குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
