ரணிலை சந்திக்கவுள்ள சம்பந்தன் தலைமையிலான குழுவினர் - செய்திகளின் தொகுப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எவ்விடயங்களை வலியுறுத்த வேண்டும் என்பது குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்திருப்பதுடன், இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமது நிலைப்பாடுகளை நேரடியாகவும் அறிவித்துள்ளன.
அதன்படி, ஜனாதிபதியிடம் சமஷ்டி முறையிலான தீர்வையே இந்தியா வலியுறுத்த வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தவேண்டுமென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தனித்தனியாக இந்தியத் தூதுவரிடம் கடிதங்களைக் கையளித்துள்ளன.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
