எனக்காக ஜனாதிபதியிடம் குரல் கொடுத்த தமிழ் மக்கள்! சரத் வீரசேகர பெருமிதம் - செய்திகளின் தொகுப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சிறுவர்களை போராளிகளாகவும் மக்களை பலியாட்களாகவும் பயன்படுத்திய போது என்னை இப்போது இனவாதியாக சித்தரிப்பவர்கள் கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்தார்கள் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிறந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் என்னுடன் உள்ளார்கள். காரைநகர் பகுதியில் நான் பல ஆண்டுகள் சேவையாற்றினேன். எனது சேவைக்காலம் முடிவடைந்த போது என்னை பிறிதொரு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டாம் என தமிழ் மக்கள் அப்போதைய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் மாத்திரமல்ல, கொழும்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களும் என்னுடன் இணக்கமாக உள்ளார்கள். ஒரு சில பிரிவினைவாதிகள் தான் தங்களின் அரசியல் இருப்புக்காக என்னை இனவாதியாக சித்தரிக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,