பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ரணில் ஏற்படுத்தியுள்ள அதிரடி மாற்றம்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. இலங்கையில் அடுத்துவரும் 6 மாதங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்காத மிகவும் கடினமான காலப்பகுதியாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
2. மஹியங்கனையில் இருந்து சென்ற பேருந்தின் கோளாறு காரணமாக ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் சாரதியின் திறமையினால் தவிர்க்கப்பட்டுள்ளது. மஹியங்கனையில் இருந்து சென்ற பேருந்து ஒன்றில் திடீரென பிரேக் இயங்காமல் போயுள்ளது. இதன் போது பேருந்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க>>> உயிரை பணயம் வைத்து நூற்றுக்கணக்கான பயணிகளை காப்பாற்றிய சாரதி
3. அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழ் குடும்பமான பிரியா - நடேசலிங்கம் குடும்பத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் நிரந்தர விசா வழங்கியுள்ளது. தற்போது அவர்கள் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வசித்து வருகின்றனர்.
மேலும் படிக்க >>> இலங்கை தமிழ் குடும்பத்திற்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அவுஸ்திரேலியா!
4. எதிர்வரும் இரு தினங்களுக்கான மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> இரண்டு நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது!
5. எரிபொருக்காக கர்ப்பிணியாக நடித்த பெண் ஒருவரின் மோசடி செயல் அம்பலமாகியுள்ளது. பிங்கிரிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கர்ப்பிணியாக நடித்த பெண்ணின் வயிற்றில் இருந்த தலையணை கீழே விழுந்ததால் அந்த பெண் சிக்கியுள்ளார்.
மேலும் படிக்க >>> எரிபொருளுக்காக பெண் ஒருவர் நடத்திய நாடகம்
6. பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்த இலங்கை சற்று முன்னேற்றம் கண்டு வருவதாக பொருளியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த நாள் எப்படியிருக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் இருந்த நாட்டு மக்கள், தற்போது நிம்மதியாக மூச்சு விட வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க >>> இலங்கையில் சர்ச்சைகளையும் தாண்டி மாற்றத்தை ஏற்படுத்திய ரணில்
7. தலவாக்கலை, லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆண் புலியை கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> வீட்டுக்குள் நுழைந்த ஆண் புலி
8. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைவதற்கான காரணங்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விளக்கம் அளித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> நட்டமடையும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
9. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த கோரிக்கை பல்வேறு தரப்புகளிலிருந்தும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க >>> போராட்டக்காரர்களுக்கு பகிரங்க பொதுமன்னிப்பு
10. மத்தியமலை நாட்டில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை கடும் காற்று பல வீடுகள் சேதம். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க >>> மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை!