உயிரை பணயம் வைத்து நூற்றுக்கணக்கான பயணிகளை காப்பாற்றிய சாரதி
மஹியங்கனையில் இருந்து சென்ற பேருந்தின் கோளாறு காரணமாக ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் சாரதியின் திறமையினால் தவிர்க்கப்பட்டுள்ளது.
மஹியங்கனையில் இருந்து சென்ற பேருந்து ஒன்றில் திடீரென பிரேக் இயங்காமல் போயுள்ளது.
இதன்போது பேருந்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் சாரதி பேருந்தை ஒரு கற்பாறை ஒன்றின் மீது மோதி தனது உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றியுள்ளார். இதனால் சாரதி மட்டும் காயமடைந்துள்ளார்.
பயணிகள் எவ்வித காயமுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர். சாரதி தனக்கும் காயம் ஏற்படாமல் பேருந்தை செலுத்தியிருந்தால் பாரிய பள்ளத்தில் விழுந்து பயணிகள் பலர் உயிரிழந்திருப்பார்கள் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தனது உயிரை பணயம் வைத்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.