நட்டமடையும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்! காரணங்களை பட்டியலிடும் அமைச்சர்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைவதற்கான காரணங்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விளக்கம் அளித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
நட்டத்திற்கான காரணங்கள்
பல ஆண்டுகளாக மானிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல். ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து அறவிடப்படும் தொகை 300 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும், இலங்கை மின்சார சபையில் இருந்து அறவிடப்படும் தொகை 60 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
நிதி நிலைமை, அதிக கடன், கப்பல் நிறுவனங்களுக்கான தாமதக் கட்டணம் மற்றும் வங்கி வட்டி போன்ற காரணங்களும் காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையற்ற பணியாளர்கள், திறமையற்ற மற்றும் தேவையில்லாமல் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள், 2012 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட 25% ஊதிய உயர்வு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்காமை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை நம்பியிருப்பது மற்றும் அதிக விநியோக செலவுகள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
1) Multiple Reasons for CPC losses-
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 5, 2022
1. Selling products at subsidized rates for years
2. Rupee Depreciation - purchases made before March was for 90-180 days credit purchased @ 203 & the payback rate is @ 367-390
3. Dues from Srilankan - USD 300Mil, CEB - Rs 60 Billion
2)
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 5, 2022
4. High Premiums, Demurrage’s & Bank Interest due to financial situation
5. Overstaffed, Inefficient & Overpaid
6. 25% salary increment on a collective agreement since 2012
7. Not operating Refinery & depending more on imported Refined products
8. High Distribution costs