தவறிழைப்பவர்கள் தொடர்பில் அநுர அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி மொழி
தவறிழைப்பவர்களுக்கு நிச்சயமாக திசைகாட்டி அரசாங்கம் தண்டனை வழங்கும் என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்கள் நிராகரித்த அரசியல்வாதிகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே எமது பயணத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அடுத்த வருடம் முதலாம் திகதி க்ளீன் ஸ்ரீ லங்கா என்ற பாரிய திட்டத்தை நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம்.
ஊழல், மோசடி, திருட்டு உள்ளிட்டவற்றில் இருந்து அரசியல்வாதிகள் விடுபட்டு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என நாம் நினைக்கின்றோம். தற்போது சபாநாயகர் பதவி தொடர்பில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளனர்.
தவறிழைக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் எமது நாட்டுக்கு தேவையில்லை. தவறிழைக்கும் அரசியல்வாதிகளை நிராகரித்தே நீங்கள் அனைவரும் திசைக்காட்டியை தேர்வு செய்துள்ளீர்கள்.
அதற்கமைய சபாநாயகர் பதவியில் இருந்து தற்போது அவர் பதவி விலகியுள்ளார். இது தொடர்பில் எதிர்காலத்தில் கருத்துத் தெரிவிப்பதற்கும் அவர் தயாராகவுள்ளார். அவ்வாறானதொரு கட்சியே எமது கட்சி.
பச்சை மற்றும் நீல நிறங்களில் செய்யப்படும் குற்றங்களை மறைக்க நீங்கள் எம்மீது நம்பிக்கை வைக்கவில்லை. எனவே தவறிழைப்பவர்களுக்கு திசைக்காட்சி கட்சி நிச்சயம் தண்டனை வழங்கும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் வாக்குறுதி அளிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.