சிக்கலுக்குள்ளான நாமலின் கல்வி தகைமை: குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்டம் தொடர்பான தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் தொடர்பான அதிகார சபையின் தலைவர் ஜமுனி காமந்ர துஷாரவினால் இன்று(16.12.2024 குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜமுனி காமந்ர,
நாமல் ராஜபக்ச
“பரீட்சை தினத்தன்று நாமல் ராஜபக்ச மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக அன்றையதினம் அவருடன் பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த இளைஞர் அன்றைய தினம் பரீட்சை கடமையில் இருந்த மண்டபத் தலைவர், சட்டக்கல்லூரி அதிபர், பதிவாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர்கள் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் இது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் தான் நீதியமைச்சின் அப்போதைய செயலாளர் சுஹத கம்லத்திடம் சென்றதாகவும், ஆனால் அவர் இந்த முறைப்பாட்டைக் கவனத்தில் கொள்ள மறுத்ததாகவும் தெரியவருகிறது.
முறைப்பாடு பதிவு
அதன் பின்னர் அப்போதைய வாழைத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அனைத்து திணைக்களங்களுக்கும் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் பின்னர் குறித்த இளைஞன் தமது பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் சாட்சியங்களை பெற்று முறையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளேன்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
