ராஜபக்சக்களுக்கு எதிரான நகர்வை ஆரம்பிக்கும் அநுர தரப்பு! சில நாட்கள் மட்டும் அவகாசம்
நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்கள் செய்த அனைத்து மோசடிகளும் இன்னும் சில நாட்களில் வெளியில் கொண்டு வரப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சில நாட்கள் அவகாசம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தாம் வங்கியை உடைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவதைப் பார்த்தேன். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கொண்டு வருவீர்களா என நாமல் ராஜபக்ச கேட்கின்றார்.
இவர் போன்ற சிலருக்கு நான் கூறுகின்றேன், இன்னும் சில நாட்கள் பொறுமையாக காத்திருங்கள்.
ரணில் மாத்திரமல்ல பிணை முறி மோசடியில் பணத்தினை பகிர்ந்து கொண்டவர்கள் யார் என்பதை நாம் மக்களுக்கு நிரூபித்துக் காட்டுவோம்.
நீதிமன்றம் எடுக்க வேண்டிய தீர்மானத்தை நீதிமன்றம் எடுக்கும். அது மாத்திரம் அல்லாது நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்கள் நாட்டில் திருடியவை, வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பவை, காணிகளை திருடியவை, பங்குச் சந்தைகளில் இட்டவை என அனைத்தும் காண்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
