மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்கா விட்டால் நிலைமை மேலும் மோசமடையும்
மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்குமாறு இலங்கை மருத்துவச் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண மக்கள் விரும்பும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்காது போனால், தற்போதைய நிலைமையை விட வன்முறைகள் அதிகரிக்கலாம் என இலங்கை மருத்துச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை மேலும் நீடித்தால், சுகாதார சேவைகள் தொடர்ந்தும் வீழ்ச்சிக்கு உள்ளாகும். தாக்குதலில் காயடைந்த 220க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மருத்துவச் சங்கம் மேலும் கூறியுள்ளது.
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam