ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் இல்லையேல் மாபெரும் போராட்டம் வெடிக்கும்: சஜித் எச்சரிக்கை
தேர்தல்கள் ஆணைக்குழு இறுதியாக எடுத்துள்ள தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தே தீர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09.03.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, அரசாங்கம் தேர்தலை மேலும் ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்கி மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்
மேலும் கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்
மீது பொலிஸாரால் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களையும் எதிர்க்கட்சித் தலைவர்
வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.