தேர்தலுக்கு தேவையான பணத்தை போன்று 27 மடங்கு பணம் அச்சிடப்பட்டுள்ளது! சஜித் தகவல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை போன்று 27 மடங்கு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தேர்தலுக்கு பணமில்லை
மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான ஓர் பின்னணியில் தேர்தலுக்கு பணமில்லை என அரசாங்கம் குறிப்பிடுவது நகைப்பிற்குரியது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் 278 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது.
இதில் பத்து பில்லியன் ரூபாவினை தேர்தலுக்காக செலவிட முடியாது என கூறுவது சந்தேகத்திற்கு உரிய விடயமாகும்.
தேர்தலுக்கான செலவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கான அரச செலவுகளின் அளவான பணமே செலவாகும்.
இவ்வாறான நிதியை ஒதுக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு நாட்டை கட்டியெழுப்பும்.
அரசாங்கம் இதுவரையில் 22 தடவைகள் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.