உலகின் சிறந்த நாடாக தெரிவான இலங்கை
உலகளாவிய ரீதியில் ஓய்வுக்காலத்தை நிம்மதியாக கழிப்பதற்காக சிறந்த நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்ட Travel & Leisure சஞ்சிகை வெளியிட்டுள்ள புதிய தரவரிசையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓய்வு பெற்ற தம்பதியினர் மாதம் ஒன்றுக்கு 1,000 அமெரிக்க டொலர்களை செலவிட முடிந்தால், இலங்கையில் மிகவும் வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ முடியும் என சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கர்கள் ஓய்வு
நிதி உறுதியற்ற தன்மை காரணமாக அமெரிக்கர்கள் ஓய்வு பெற தயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தங்கள் ஓய்வூதிய காலத்தை நீட்டிக்க முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இப்போது, அந்தப் பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வு உள்ளதாகவும், அமெரிக்க ஓய்வு பெற்றவர்கள் இலங்கையில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ முடியும் என்று Travel & Leisure சஞ்சிகை தெரிவித்துள்ளது.
உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் மலிவு விலையில் உள்ளன,
மேலும் 1,000 அமெரிக்க டொலர்களை செலவிடும் ஒரு தம்பதியினர் மாதத்தின் பெரும்பாலான நாட்களில் வெளியே சாப்பிட முடியும் என்று அந்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளூர் உணவு
ஒரு தம்பதியினர் நான்கு அமெரிக்க டொலர்களுக்கு உள்ளூர் உணவு வகைகளில் மூன்று வேளை உணவுகளை அனுபவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தரவரிசையில் வியட்நாம் இரண்டாவது இடத்தில் உள்ளது, மேலும் ஒரு தம்பதி வியட்நாமில் தங்கள் ஓய்வு காலத்தை ஆடம்பரமாக கழிக்க 1800 அமெரிக்க டொலர்களை செலவிடலாம்.
தாய்லாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது, 2000 அமெரிக்க டொலர்களை செலவிடக்கூடிய ஒரு தம்பதி தாய்லாந்தில் தங்கள் ஓய்வு காலத்தை ஆடம்பரமாக கழிக்கலாம்.
இதேபோல், தரவரிசையில் நான்காவது இடத்தை இந்தோனேசியாவின் பாலி தீவுகளும், ஐந்தாவது இடத்தை மலேசியாவும் பிடித்துள்ளன.
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam