எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சி – ஒமல்பே சோபித தேரர்
சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியாவிற்கு நேர்ந்த நிலைமையே இலங்கைக்கும் நேரிடும் என ஒமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
இந்திய வெளிவிவகார அமைச்சர் திருகோணமலைக்கு சென்று எண்ணெய் தாங்கிகளை பரிசோதனை செய்தது நோக்கம் மோசடியாக வர்த்தக நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவே என அவர் தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள 85 எண்ணெய் தாங்கிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றே தகவல்கள் கிடைத்துள்ளன.
நாட்டின் சொத்துக்களை இவ்வாறு கொள்ளை விலையில் விற்பனை செய்வதற்கு தற்போதைய ஆட்சியாளருக்கு உள்ள உரிமை என்ன?
இந்த நடவடிக்கை மிகப் பெரிய ஓர் பாவச் செயல், தூரநோக்கற்ற எதேச்சாதிகார செயலாகும். தேசிய சொத்துக்கள் கொள்ளையிடப்படுவதற்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்.
எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அரசாங்கம் இந்த விடயங்களை செவி சாய்ப்பதில்லை.
எதிர்காலத்தில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லை என்றே நினைக்கின்றேன் என ஒமல்போ சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri