மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ள இலங்கை! உடன் முடக்கத்திற்கு கோரிக்கை
நாட்டில், நாளாந்த கோவிட் தொற்றுக்களில் அபாயகரமான அதிகரிப்பு உள்ளது மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை (GMOF) தெரிவித்துள்ளது.
பேரவையின் செயலாளர்- வைத்தியர் கமல் ஏ பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் டெல்டா மாறுபாடு வேகமாக பரவுவதால், ஒக்ஸிஜனை நம்பியிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனை திறன் அமைப்பிற்கு தாங்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையில், இலங்கை இப்போது மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது என்று வைத்தியர் பெரேரா கூறினார்.
நாளாந்த நேர்மறையான தொற்றுக்களின் எண்ணிக்கையை விட சமூகத்தில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசிகள் கோவிட் இறப்புகளைக் குறைத்தாலும், வைரஸின் விரைவான பரவல் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் பொதுமக்களின் கவனக்குறைவான நடத்தையைக் கருத்தில் கொண்டு வைரஸ் பரவுவதை உடனடியாகக் கட்டுப்படுத்த முடக்கம் அவசியம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை அறிவுறுத்தியுள்ளது.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
