அமெரிக்கா வசமான இலங்கை புலனாய்வுத்துறை - திரிசங்கு நிலையில் இந்தியா (Video)
இலங்கையைப் பொறுத்தவரை அது தற்போது மிகப் பெரிய ஒரு பூகோள நெருக்கடியில் சிக்கியுள்ளது என பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்துத் தரப்பினரையும் சமாளித்து போகலாம் என்ற இலங்கையின் நிலைப்பாடானது சாத்தியமற்ற ஒன்று என்றும் இதனாலேயே சீனாவின் கப்பல் நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாமல் போய்விட்டதாக கலாநிதி அருஸ் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்தால் தெற்கு முனையத்தை அதானி குழுமத்திற்கு வழங்கி உள்ளதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |