காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் ராஜபக்ச குடும்பம் செய்த மோசடி! தகவலை வெளிப்படுத்திய ஊடகருக்கு நடந்த விபரீதம்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பாரிய சொத்துக்களை (Reinsurance) செய்வது கட்டாயமாகும். ஆனால் அந்த செயற்பாடு நடைபெற்றிருக்கவில்லை.
அந்த செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர் லசந்த ரூனுகேவை கொலை செய்ய முயற்சித்த கதையை அவர் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் அம்பலப்படுத்தியுள்ளார். அது தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக கருத்து,
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பாரிய சொத்துக்களை காப்புறுதி செய்யும் போது அதை தாங்கிக் கொள்ள இலங்கை காப்புறுதி கூட்டுத்தானத்திற்கு முடியாது. ஏனென்றால் அச்சந்தர்ப்பத்தில் உள்நாட்டு போர் முடிவடைந்திருக்கவில்லை.
அதனால் (Reinsurance) செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த (Reinsurance) தகுதியற்ற அல்லது கறுப்புப் பட்டியலில் இருந்த இந்தியத் தரகர் ஒருவர் மூலமாகவே செய்யப்பட்டிருந்தது.
மீள் காப்புறுதி செய்தல்
அவர் உலகின் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களில் இந்த (Reinsurance) ஐப் போடுவதாகக் கூறினார். எனக்கு நினைவிருக்கும் வகையில் அக்காலத்தில் இதன் பிரீமியம் சுமார் 450 மில்லியனாக இருந்தது.
எப்படியோ ஏனைய கட்டணங்களோடு சேர்த்து ஒரு வருடத்திற்கான பிரீமியம் 1 பில்லியனுக்கும் அதிகம். அதாவது சுமாராக 100 கோடி ரூபாயாகும். ஆனால் இது உண்மையில் (Reinsurance) செய்யப்பட்டிருக்கவில்லை.
இந்தத் தகவலை நான் அந்த நேரத்தில் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த காமினி செனரத்விடம் அதாவது மஹிந்த ராஜபக்சவின் மைத்துனரிடம் பேசினேன். அக்காலத்தில் காமினி செனரத் ஜனாதிபதியின் பணிக் குழாம் தலைமை அதிகாரியாகவும் பல ஹோட்டல் திட்டங்கள் உட்பட பல அரசு நிறுவனங்களில் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் கேட்டபோது 'எனக்குத் தெரியாது லசந்த இதைப் பற்றிய தகவல்களை... நீங்கள் கொஞ்சம் வந்து என்னைச் சந்தியுங்கள் நாம் பேசுவோம்' என்றார். அதற்கு நான் 'உங்களை வந்து சந்தித்துப் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்' என்றேன். பின்னர் அவர் 'இல்லை நான் ஒரு வாகனத்தை அனுப்புகிறேன் அலுவலகத்திற்கு அங்கு வந்து உங்களை அழைத்து வரச் சொல்கிறேன்' என்றார். நான் அதை நிராகரித்தேன்.
கொலை முயற்சி - சிறைப்படுத்தல்
எப்படியோ இதைக் கண்டுபிடித்து இந்த செய்தியை நிறுத்துங்கள் நாங்கள் ராவய பத்திரிகைக்கு விளம்பரங்கள் தருகிறோம் என்று. ஆனால் நாங்கள் அதை நிறுத்தவில்லை. பெற்றோலிக் கூட்டுத்தாபனத்தின் (Reinsurance) பற்றிய இந்தச் செய்தியை முதன்மைச் செய்தியாக வெளியிட்டோம்.
வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு விக்டர் ஐவன் என்னிடம் வந்து கூறினார்: 'லசந்த உனது இந்தச் செய்தியைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அலுவலகத்தில் பேசியிருக்கிறார்கள்.
அதாவது 'இவன் (லசந்த) நமக்கு மேலும் அச்சுறுத்தலாக இருந்தால் இவனை முடித்து விடுவோம்' என்று. மிகவும் மோசமான குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தி உன்னைக் கைது செய்ய மஹிந்த ராஜபக்சக்கள் திட்டமிடுகிறார்கள்.

தேர்தலைக் காரணம் காட்டி உன்னை உள்ளே தள்ளப் போகிறார்கள் என்று. விக்டர் ஐவன் எனக்கு சொன்னார். அதன் பின்னர் எனது சித்தப்பாவின் மகனின் ஹோட்டலில் ஸ்பா நடப்பதாக கூறி அந்த ஹோட்டலை மூடி நான் அதில் ஏதும் சம்பந்தப்பட்டுள்ளேனா என்று தேடிப்பார்த்துள்ளனர்.
ஆனால் அந்து ஹோட்டல் சட்டப்படி நடத்தப்பட்டதாகும்.என்னைச் சுற்றி மூன்று மாதங்களாக சி.ஐ.டி கண்காணிப்பில் இருந்ததாகச் சொன்னார்கள். மேலும் ஒருமுறை ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் சக ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறு கூறினார் 'கோட்டாபய உன்னை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்' என்று.
கடினமான காலக்கடத்தைக் கடந்துதான் வந்தேன். எப்படியோ இன்றைக்கும் உயிரோடு இருக்கிறேன் ஏதோ ஒரு காரணத்திற்காக எனக் குறிப்பிட்டுள்ளார்.