சிலையை அகற்றியது பொலிஸார் : பட்டப் பகலில் பொய் கூறும் அமைச்சர் - வேலன் சுவாமிகள் காட்டம்
யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிடத்திலிருந்து திலீபனின் திரு உருவச்சிலையை அகற்றியது மாநகர சபை அல்ல சிறீலங்கா பொலிஸார் எனத் தெரிந்தும் அமைச்சர் சந்திரசேகர் பட்டப்பகலில் பொய் கூறுகிறார் என வேலன் சுவாமிகள் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்று(28.09.2026) யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் உருவாச்சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தியாக தீபத்தின் உருவச்சிலையை அகற்றியது
மேலும் தெரிவிக்கையில் தியாக தீபத்தின் திரு உருவ சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ் மாநகர சபைக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தான் காரணம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவர் பட்டப் பகலில் பச்சைப் பொய்யை கூறி சிறீலங்கா அரசின் தமிழின விரோத போக்கை மறைப்பதற்காக திட்டமிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார்.
தியாக தீபத்தின் உருவச்சிலையை அகற்றியது அநுர தலைமையிலான அரசாங்கத்தின் பொலிஸார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவ்வாறான ஒரு நிலையில் சிலை விவகாரத்தை திசை திருப்புவதற்காக தமிழ் கட்சிகள் இடையே பிளவை ஏற்படுத்துவதற்காக அமைச்சர் சந்திரசேகரர் திட்டமிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார்.
அநுர தலைமையிலான அரசாங்கம்
அகிம்சையை போதித்த திலீபனின் சிலையை அகற்றத் துணிந்த அநுர அரசாங்கம் அவ்வாறு தமிழ் மக்களுக்கான சம உரிமையை வழங்கும் என்பது கேள்வி.

தமிழர் பகுதிகளில் இராணுவத்தின் நினைவுச் சின்னங்களும் உருவச் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களுக்காக தனது இன்னுயிரை நீத்த அகிம்சாவாதிக்கு உருவச்சிலை அமைப்பது தவறா.
மாநகர சபையினுடைய அதிகாரத்தை சிறீலங்கா பொலிஸார் கையில் எடுத்தமை சட்டவிரோதமான செயல் அதில் சம்பந்தப்பட்ட பொலிஸார் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகவே சிங்கள பௌத்த மேலாதிக்கத்தில் செயல்படும் அநுர தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மதித்து தியாக தீபத்தின் மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam