லலித் - குகன் விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
லலித் - குகன் வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று நிகழ்நிலையில் சாட்சியமளித்தார்.
மேலதிக சாட்சி விசாரணைகள் நவம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச தரப்பு சட்டத்தரணி சுரங்க பெரேராவும்
பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி நூவான் போபகேவும் கருத்துதெரிவித்தனர்.
தகவல்- தீபன்
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் இணையவழியாகச் சாட்சியம் அளிப்பதற்காக அவர் நீதிமன்றம் வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச
கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் அரசியல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் ஆகிய இருவரும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்த காலகட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியதால், இந்த ஆட்கொணர்வு மனு வழக்கில் ஒரு முக்கிய சாட்சியாக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக சாட்சி விசாரணைகள் நவம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச தரப்பு சட்டத்தரணி சுரங்க பெரேராவும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி நூவான் போபகேவும் கருத்து தெரிவித்தனர்.