நுவரெலியாவில் வேன் மோதி பெண் தோட்டத் தொழிலாளி படுகாயம்
பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தில் வேன் மோதி, பெண் தோட்டத் தொழிலாளியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று(28.09.2026) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த
பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்திலிருந்து பொகவந்தலாவை நகரம் நோக்கி பயணித்த வேன் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டைமீறி மேற்படி தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது கொழுந்து மடுவத்துக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் தோட்டத்தொழிலாளிமீது வேன் மோதியதில், அவர் படுகாயம் அடைந்தார்.
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள வேன் சாரதியை இன்று(29) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri