எயார் பஸ் மோசடி: நிமல் பெரேரா குறித்து முன்னாள் அமைச்சர் ஒருவரின் பரபரப்பான தகவல்கள்...
எயார் பஸ் கொடுக்கல் வாங்கலில் நாமலுக்கு பணம் கொடுத்ததாக குறிப்பிட்ட நிமல் பெரேரா என்பவர் எனக்கு மிக அருகில் இருந்தவர். எனது ஊழியர் குழாமில் இருந்து பின்னர் அவரை நான் கிரிக்கெட் சபை -பான் ஆசியா வங்கிக்கு வேலைக்கு அனுப்பி அப்படி வந்தவர் தான் அவர்.
ஆனால் கடைசி காலத்தில் அவர் ராஜபக்ச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றினார். எனவே இப்போதுள்ள குற்றச்சாட்டின் படி நிமல் பெரேரா அந்தப் பணத்தைப் பெற்று நாமலிடம் கொடுத்தார் என்றால் நிமலும் தவறு செய்தவர்தானே? நிமலால் அதிலிருந்து தப்ப முடியாதுதானே? அவர்தானே பணத்தைப் பெற்றிருக்கிறார்.
ஆனால் அரசாங்கம் அதைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனால் நாமலிடம் கொடுத்ததாகக் கூறியவுடன் நாமலைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
கிரிஷ் மற்றும் எயார்பஸ் ஒப்பந்தங்கள் தொடர்பான இரு வேறு வழக்குகள்! நாமலுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
ராஜபக்ச குடும்பத்திற்கு உள்ள குற்றச்சாட்டு
இருப்பினும் குற்றச்சாட்டுகள் கடுமையானவை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று அவர் வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்த பேசிய அவர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானவை.
அதேபோல சிரந்தி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஇ பசில் ராஜபக்ச- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களைப் பார்க்கும்போது அவை கடுமையான குற்றச்சாட்டுகள் மேலும் பாரதூரமானது.
எனவே அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் நீதிமன்றத்தில் அந்தப் விவரங்களைக் கூறி விடுதலையாக முடியும். ஆனால் குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
அதாவது அவர்கள் தவறு செய்தார்களா இல்லையா என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அந்தச் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. நாமல் பாரிய அரசியல் பயணத்தை மேற்கொள்ள நினைக்கிறார்.
அதேபோல ராஜபக்ச குடும்பத்தினரதும் முன்னாள் ஜனாதிபதியினதும் ஒரே இலக்கு நாமலை மேலே கொண்டு வருவதாகும். எனவே அது சிறிய சக்தி அல்ல- அது ஒரு மிகப்பெரிய சக்தி. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போரை வென்ற ஜனாதிபதி.

அதேபோல 48 ஆம் ஆண்டிலிருந்து பார்த்தால் அவரது காலத்தில்தான் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்தது. அதனால் மக்களுக்கு உணர்வுப்பூர்வமான விடயங்கள் அவரது காலத்தில் நடந்தன.
அதேபோல 30 ஆண்டுகாலப் போரை அவர் மிகவும் திறமையாக முடிவுக்குக் கொண்டுவந்தார். எனவே அது சிறிய விடயம் அல்ல மக்களின் மனதில் அவை இருக்கின்றன. கிராம வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன கிராமத்து வீதிகளுக்கு தார்யிடப்பட்டன.
இவையெல்லாம் சிறிய விடயங்கள் அல்ல. ஆனால் அந்தத் திட்டங்கள் மூலம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் கடுமையானவை. குறிப்பாக பசில் ராஜபக்சவுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை என்பதுதான் எனது நம்பிக்கை.
மேலும் சஷேந்திர ராஜபக்ச ஒரு வீட்டிற்காக இழப்பீடு பெறப்பட்டதாகக் கூறப்படும் விடயம் கோட்டாபய ராஜபக்சவுக்கு கதிர்காமத்தில் உள்ள ஒரு வீடு தொடர்பான விடயம் பசில் ராஜபக்சவின் நிலங்கள் மற்றும் வீடுகள் வாங்கியது தொடர்பான பல விடயங்கள் உள்ளன.
பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் நாமலைத் தொடர்ந்து சிறையில் அடைக்க முயற்சி! அரசு மீது மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு