உலகக்கிண்ண தொடரில் கேள்விக்குறியாகியுள்ள இலங்கை அணியின் நிலை
உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடி வரும் நிலையில் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை தோல்வி அடைந்து குரூப் 'டி' பிரிவில் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளது.
சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கு ஒரு பிரிவில் முதல் இரண்டு இடங்களுக்குள் வர வேண்டும்.
பங்களாதேஸ் வெற்றி
ஆனால், இலங்கை அணியைப் பொறுத்த வரையில் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெக்சாஸ் நபியரின் கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் இன்று (08.06.2024) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலக்கை அடைந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
