இலங்கை - பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை
உலகக் கிண்ண தொடரின் டி குழுவில் இன்று இடம்பெறும் போட்டியில் இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் ஆரம்பமான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றப ங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
தென் ஆபிரிக்காவுடனான தனது ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை, எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணி
மறுபக்கத்தில் தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷ் விளையாடவுள்ளது.
இலங்கையும் பங்களாதேஷ் அணியும் விளையாடியுள்ள 16 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 11 - 5 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.

டி20 உலகக் கிண்ண வரலாற்றில் பங்களாதேஷுடன் விளையாடிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க (c), மஹீஷ் தீக்ஷன அல்லது துனித் வெல்லாலகே, நுவன் துஷார, மதீஷ பத்திரண ஆகியோர் விளையாடவுள்ளனர்.
மேலும். பங்களாதேஷ் அணி சார்பாக தன்ஸித் ஹசன், சௌம்யா சர்க்கார், நஜிமுல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), தௌஹித் ரிதோய், ஷக்கிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி அல்லது லிட்டன் தாஸ், மெஹெதி ஹசன், ரிஷாத் ஹொசெயன், தன்ஸிம் ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam