அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி
உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரில் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளது.
போட்டி ஏற்பாட்டாளர்களான அமெரிக்கா முதல் தடவையாக உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் கிரிக்கட் அணி அறிமுக அணியான அமெரிககாவிடம் முதல் சுற்றுப் போட்டியொன்றில் தோல்வியடைந்துள்ளது.
சுப்பர் ஓவர்
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சுப்பர் ஒவரில் அமெரிக்கா வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றக்கொண்டது இதில் உஸ்மான் கான் 44 ஓட்டங்களையும் சாடெப் கான் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அமெரிக்க அணியின் சார்பில் நொஸ்டுக் கின்ஜெ 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் மொனாக் பட்டெல் 50 ஓட்டங்களையும் ஆரோன் ஜோன் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டியில் இரு அணிகளும் சம எண்ணிக்கையிலான ஓட்டங்களைப் பெற்ற காரணத்தினால் சுப்பர் ஓவர் மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.
சுப்பர் ஓவரில் அமெரிக்க அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 18 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதன்படி சுப்பர் ஓவரில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றியீட்டியது.
பாகிஸ்தான் அணி இவ்வாறான உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிர்ச்சி தோல்விகளை பல சந்தர்ப்பங்களில் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |