அமெரிக்கா - இந்தியாவின் கிடுக்குப்பிடி! இக்கட்டான நிலைக்குள் இலங்கை
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வல்லரசு நாடுகளே காரணம் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விஞ்ஞான விரிவுரையாளருமான அமிர்தநாயகம் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறினார்.
“போருக்கு முன்னரும், பின்னரும் வல்லரசு நாடுகளை நம்பியே இலங்கை இருந்திருக்கின்றது. 2009ம் ஆண்டுக்கு முன்னர் பொருளாதார ரீதியிலும், ஆயுத ரீதியிலும் வல்லரசு நாடுகளை நம்பியே இலங்கை இருந்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை நம்பியே இலங்கை இருந்துள்ளது. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பொருளாதார ரீதியாக இந்த நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வல்லரசு நாடுகளிடம் இருந்து நிதியை பெறுகின்ற போது அவர்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கின்ற இடத்தையும் கொடுக்கக் கூடிய சிக்கலுக்குள் இலங்கை மாட்டியிருக்கின்றது” என அவர் கூறியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்



