ரணில் எடுக்கப்போகும் இறுதி முடிவு! காத்திருக்கும் தென்னிலங்கை அரசியல் தரப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 இலங்கையில் சித்தர்கள் வாழ்ந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமியில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நடந்துவரும் இத்தருணத்தில், நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழலை வெற்றி கொண்டு, அனைவருக்கும் நலம்நல்க நல்லூர் கந்தனைப் பிரார்த்திப்போம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நெருக்கடிகளை வெற்றி கொள்ள நல்லூர்க் கந்தனைப் பிரார்த்திக்கும் ஜனாதிபதி ரணில் >>> மேலும்படிக்க
2 முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோகித ராஜபக்சவிற்கு சொந்தமான ஹோட்டல் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கராஜ வன எல்லையில் அமைந்துள்ள Green Eco Lodge ஹோட்டலுக்கு தீ வைத்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலுக்கே செல்லாத மகிந்தவின் கடைசி மகன் ஹோட்டல் உரிமையாளரானது எப்படி...! >>> மேலும்படிக்க
3 தடை செய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகளில் ஆறு அமைப்புகளின் தடைகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆறு இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் >>> மேலும்படிக்க
4 கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை வியத்தகு முறையில் மாற்றிக்கொள்ளுமாறு சீனாவை இலங்கை வலியுறுத்தியுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிக்கேய் ஏசியாவிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
எளிதான காரியம் அல்ல! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ரணில் >>> மேலும்படிக்க
5 பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டெழ இரண்டு ஆண்டுகளாவது தேவை, அதிலும் எதிர்வரும் ஓராண்டு எமக்கு மிகப் பெரிய சவாலான ஆண்டாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்! ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ரணிலின் விசேட தகவல் >>> மேலும்படிக்க
6 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் ஒருவேளை உணவுக்காக போராடி வருகின்றனர். விண்ணைமுட்டும் விலைவாசியால் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளனர்.
தென்னிலங்கையில் கடவுளாக வாழும் மனிதர்கள் - நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் மனிதநேயம் >>> மேலும்படிக்க
7 இலங்கையில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடு திரும்புவார் என பல தடவைகள் தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை அவர் நாட்டை வந்தடையவில்லை. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கோட்டாபயவுக்கு திகதி குறித்த ரணில்
>>> மேலும்படிக்க
8 புதிய அமைச்சரவை நியமனத்தின்போது ஒவ்வொரு கட்சிகளினதும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப உரிய இடம் வழங்கப்படும். இதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இறுதி முடிவு ரணிலின் கையில்! காத்திருக்கும் மகிந்த தரப்பு >>> மேலும்படிக்க
9 சில மாதங்களுக்கு முன்பு "அரச ஊழியர்களே நாட்டுக்குப் பெரிய சுமை" என்றார் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச. அவரின் கூற்றினைப் பின்தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், "வேலைசெய்ய முடியாத அரச ஊழியர்கள் வீட்டுக்குப் போகலாம்" எனக் கூறியுள்ளார். இந்தக் கூற்றுக்களைப் பலரும் வழிமொழிகின்றனர்.
இலங்கையில் மட்டுமே உள்ள நடைமுறை - அரச ஊழியர்கள் யாருக்கு சுமை...! >>> மேலும்படிக்க
10 நாட்டை வந்தடைந்துள்ள சுப்பர் டீசல் கப்பலில் இருந்து, சுப்பர் டீசலை தரையிறக்கும் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல் >>> மேலும்படிக்க