தென்னிலங்கையில் கடவுளாக வாழும் மனிதர்கள் - நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் மனிதநேயம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் ஒருவேளை உணவுக்காக போராடி வருகின்றனர்.
விண்ணைமுட்டும் விலைவாசியால் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளனர்.
பசியால் வாழும் மக்கள்

இவ்வாறான நெருக்கடியான நிலையில் பலர் உணவின்றி பசியால் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தென்னிலங்கையிலுள்ள வரல்ல, இழுக்கெட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் அங்கு வருபவர்களை நெகிழ வைத்துள்ளார்.
தனது உணவகத்திற்கு வரும் வறுமையானவர்கள் என்ன வேண்டுமானாலும் உட்கொள்ள முடியும். அதற்கு கட்டணம் அறவிடப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெகிழ்ச்சியான செயல்

அதற்கமைய, தனது உணவகத்தில் பதாகை ஒன்றையும் அவர் மக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். அதில், “இல்லாதவர்கள் பசியில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து உட்கொள்ளுங்கள்.. ஒரு ரூபாயேனும் எங்களுக்கு வேண்டாம். உண்மையாகவே அவசியம் உள்ளவர்கள் மாத்திரம் இந்த சந்தர்ப்பத்தில் இங்கு வந்து உணவுகளை பெற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் கர்ப்பிணி தாய்மாருக்கு உட்கொள்ளும் உணவிற்கும் பணம் அறவிடப்படாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகமான விலைவாசி உள்ள போதும் இவ்வாறான மனிதநேயத்துடன் சிலர் செயற்படுவது, பசியால் வாடுவோருக்கு தெய்வமாக தென்படுவதாக பயன்பெற்ற பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam