தொழிலுக்கே செல்லாத மகிந்தவின் கடைசி மகன் ஹோட்டல் உரிமையாளரானது எப்படி...!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோகித ராஜபக்சவிற்கு சொந்தமான ஹோட்டல் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
சிங்கராஜ வன எல்லையில் அமைந்துள்ள Green Eco Lodge ஹோட்டலுக்கு தீ வைத்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டலுக்கு தீ வைப்பு
தீ வைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் அனைவரும் கொலொன்ன பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
மே 9ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறை காரணமாக ரோகித் ராஜபக்சவின் ஹோட்டல் எரிந்து முற்றாக அழிக்கப்பட்டன.
இந்த ஹோட்டல் வளாகம் தீக்கிரையாக்கப்பட்ட பின்னர், இது மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.
மகிந்த குடும்பத்திற்கு சொந்தம்
எனினும், அவர் அந்த செய்திகளை மறுத்தார், ஆனால் அது தனது சகோதரருக்கு சொந்தமானது என கூறவில்லை.
ரோகித ராஜபக்ச இது வரையில் எந்தவிதமான வேலைகளிலும் ஈடுபட்டதாக எந்தத் தகவலும் இல்லை. எனினும் இவ்வளவு பெரிய ஹோட்டல் வளாகத்திற்கு உரிமையாளர் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
கொலன்னாவை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜகத் குமார தலைமையில் இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.