இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் மட்ட குழு யாழ். விஜயம் (Photos)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரும் ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தலைமையிலான ஆணைக்குழுவின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் (17.02.2023) மேற்கொண்ட விஜயத்தின்போது ஆணையாளர், செயலாளர், விசாரணைப் பணிப்பாளர், சட்ட அலுவலர்கள் அடங்கிய குழுவினருடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் உடனிருந்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது, முதலாவதாக சமயத் தலைவர்களுடன் கலந்தாலோசித்துள்ளனர்.
கலந்தாலோசனை
குறிப்பாக யாழ். மாவட்டத்தில் பெரிதாகப் பேசப்படுகின்ற போதைப்பொருள் தொடர்பாக, புனர்வாழ்வு அளித்தல், தன்னார்வ ரீதியில் சமய நிறுவனங்கள் எவ்வாறு அந்த புனர்வாழ்வு பொறிமுறைகளை உருவாக்க முடியும், அதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எவ்வாறான உதவிகளைச் செய்ய முடியும் எனக் கலந்தாலோசனை செய்துள்ளனர்.
அதன்பின்னர் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சகல பொலிஸ் மா அதிபர்களையும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டது.
நல்லிணக்க ஆணைக்குழு
அதன் பிரகாரம் யாழ்ப்பாணத்தில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாகவும், பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் இன்றையதினம் கலந்துரையாடப்பட்டுள்ளன.
நாளையதினம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுமாக இருந்தால்
அது எவ்வாறான முறையில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற முறைகளை ஆணைக்குழு
வழங்குவதற்கு ஏதுவாக, பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளோடு அரசு மற்றும்
அரசியல் பிரமுகர்களோடு கலந்தாலோசனை செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
