கொழும்பு பல உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
வடமேற்கு மாகாணங்களிலும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானத்தை எட்டும் மட்டத்தில் நாளை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணிபுரியும் இடங்களில் இருந்தால் போதுமான அளவு தண்ணீர் குடித்துவிட்டு நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
மேலும், சிறு குழந்தைகளை வாகனங்களில் தனியாக வைத்துவிட்டு செல்ல வேண்டாம் எனவும், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வெளியில் வேலை செய்யும் போது அதிக உழைப்பினாலான வேலைகள் செய்வதனை நிறுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
you may like this