மின் கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு
கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (21.02.2024) அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பான யோசனையை மின்சார சபை, நாளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டணம் குறைக்கப்படும் முறைமை
அதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படும்.
கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலாத்துறைக்காக அதிகரிக்கப்பட்ட 12 சதவீத மின் கட்டண உயர்வை முழுமையாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் மாதத்தில் அரச நிறுவனங்களின் மின்கட்டணம் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டதுடன், புதிய திருத்தத்தின் பிரகாரம் அத்தொகையும் குறைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
