கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ள இலங்கை
கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக பத்திரப்பதிவுதாரர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்ற நீதிபதியிடம், மேலும் ஐந்து மாத கால அவகாசத்தை இலங்கை கோரியுள்ளது.
தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவே இந்த கூடுதல் அவகாசம் வேண்டும் என்று இலங்கை குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக 2022, ஜூலையில் ஹாமில்டன் ரிசர்வ் நிறுவனம் வழக்கை தாக்கல் செய்தது.
புதிய கோரிக்கை
இதன்போது இலங்கை அரசு, அந்த மாதத்தில் செலுத்த வேண்டிய 250 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான டொலர் பத்திரத்தின் முழுப் பணத்தையும் கோரியது.
கடந்த நவம்பரில் இடம்பெற்ற விசாரணையின்போது கடன்களை செலுத்துவதற்காக இலங்கைக்கு காலதாமதம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அந்த காலதாமதத்தை நீடிக்குமாறு இலங்கை நேற்று இடம்பெற்ற விசாரணையின்போது கோரியுள்ளது.
ஹாமில்டன் ரிசர்வ் நிறுவனம் இலங்கையின் புதிய கோரிக்கையை எதிர்த்தது.கடன் மறுசீரமைப்பு தொடர்பான பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும், இலங்கை அரசு அதனை முன்னெடுக்கவில்லை என்று வங்கி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |