உலகில், மிகக் குறைந்த வீதி போக்குவரத்து வேகத்தை கொண்ட இலங்கை!
மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர்
இலங்கையில் வீதிப்போக்குவரத்து வேகம் பொலிவியாவை போன்று மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் என்ற அளவிலேயே உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த மெதுவான வீதிகளும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஏதுக்களாகும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
வேகம் குறைந்த பங்களாதேஷ்
எனினும் பங்களாதேஷ் மற்றும் நிக்கரகுவா ஆகிய நாடுகளை காட்டிலும் முன்னிலையில் உள்ளது.
இந்த நாடுகளில் முறையே மணித்தியாலத்துக்கு 41 கிலோ மீற்றர் மற்றும் 46 கிலோமீற்றர் என்ற வேகமுறையே நடைமுறையில் உள்ளது.
இந்தியாவிலும் மெதுவான வீதிப்பிரிவுகள் உள்ளன.
எனினும் அதன் சராசரி வேகம், மணித்தியாலத்துக்கு 58 கிலோமீற்றர்களாகும்,
ஆப்கானிஸ்தானில் 57 கிலோமீற்றர், இந்தோனேசியாவில் 55 கிலோமீற்றர் என்பன நடைமுறையில் உள்ளன.
சர்வதேச நாணய நிதிய பகுப்பாய்வின்படி, அமெரிக்காவில் மணித்தியாலத்துக்கு 107 கிலோமீற்றர் வீதிகள் உள்ளன.
சவூதியில் 106 கிலோமீற்றர், கனடாவில் 106 கிலோமீற்றர் என்ற அளவில் வீதிகள் அமைந்துள்ளன.
சந்தைக் காரணிகள்
இந்தநிலையில் தொலைதூர சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு செல்லக்கூடிய அதிவேக சாலைகள் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன.
வறுமையை குறைக்கின்றன மற்றும் நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்களிக்கின்றன என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.