இரண்டு வருடங்களில் பாரிய அழிவை சந்தித்துள்ள இலங்கை! ராஜித எம்.பி. சுட்டிக்காட்டு
நாடு கடந்த இரண்டு வருடங்களில் பாரிய அழிவைச் சந்தித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"நாடு பாரியளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நாம் கடந்த ஐந்து வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைச் சிறந்த முறையில் நிர்வகித்து வந்தோம். அதுமட்டுமன்றி நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் பொருட்களைப் பெற்றுக்கொடுத்தோம்.
மருந்துகளின் விலையில் நிலையான தன்மையைப் பேணி மிகவும் குறைந்த விலைக்கு அவற்றைப் பெற்றுக்கொடுத்தோம்.
எரிபொருள் விலையைக் குறைத்து அதற்கான பலனை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தோம்.
நாட்டைப் பொருளாதார ரீதியில் மிகச் சிறந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு
சென்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 3 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri